முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத் திகதி : 24.08.2020


some document

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் 2019(2020) (Open Competitive Examination for Recruitment to Grade III of Management Service Officers Service - 2019(2020) கோரப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி இன்று (2020.07.17) வெளியிடப்பட்டுள்ளது.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் IIIக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் எதிர்வரும் 2020 நவம்பர் மாதமளவில் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் நடாத்தப்படும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் சுருக்கமாக,

தகைமைகள்

(a) இலங்கைப் பிரஜையாக இருத்தல்
(b) விண்ணப்ப முடிவுத்திகதியில் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவராக இருத்தல்.
(c) சிறந்த நன்நடத்தையுடையவராக இருத்தல்
(d) இலங்கையின் எப்பாகத்திலும் சேவையாற்றக்கூடிய உடற் தகுதியுடையவராக இருத்தல்,

(d) கல்வித்தகைமைகள்

(1) கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒரே தடவையில் சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 04 நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல், 

மற்றும்

(2) கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் (பொது வினாத்தாள் மற்றும் பொது ஆங்கிலம் தவிர) 

விண்ணப்ப முடிவுத்திகதி - 2020.08.24



பதவியணியினர்

  • 35500

ஆட்சேர்ப்பு

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதுடன், அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவது இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் தகைமைகளை பரீசீலனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சையில் தகைமை பெறுகின்றவர்கள் மாத்திரமாகும். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இல் காணப்படுகின்ற மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 70% திறந்த அடிப்படையிலும், 30% இற்கு மேற்படாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.

விண்ணப்பித்தல்

அரசாங்க வர்த்தமானியில் பரீட்சை அறிவித்தல் வெளியிடப்படுவதன் ஊடாக ஆட்சேர்ப்புக்கான பரீட்சைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய முறை பற்றி தகவல்கள் வெளியிடப்படும்.

சேவைக்கான ஆகக் குறைந்த தகைமைகள்

  • திறந்த அடிப்படையிலானது:
    • இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
    • விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இறுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாதவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
    • ஆகக் குறைந்த கல்வித் தகைமைகள் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் வேறு இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
    • க.பொ.த. (உ.த.) பரீட்சையில் பொது விடயப் பரீட்சை தவிர்ந்த சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்.

  • மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலானது:
    • அரசாங்க சேவையின் நிரந்தர கனிஷ்ட ஊழியராக இருத்தல் வேண்டும்
    • உரிய திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனத்தின் கீழ் தொடர்ச்சியாக 5 வருட திருப்திகரமான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருப்பதாக உரிய திணைக்களத் தலைவர் உறுதி செய்தல் வேண்டும்
    • 2001.11.26 ஆம் திகதிக்கு பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள கனிஷ்ட ஊழியர்கள், மொழி / இலக்கியம் மற்றும் கணிதம் உள்ளடங்களாக ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்

No comments:

Post a Comment